முருங்கைக் காய் பொரித்த கூட்டு

முருங்கைக் காய் பொரித்த கூட்டு
Updated on
1 min read

என்னென்ன தேவை?

முருங்கைக் காய் விழுது - 2 கப்

பாசிப் பருப்பு - கால் கப்

உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் (விரும்பினால்) - 4 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 3

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன் (ஒரு சிட்டிகை)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

எப்படிச் செய்வது?

முருங்கைக் காயைக் குறுக்காக இரண்டாக வெட்டி ஸ்பூன் மூலம் சுரண்டினால் விழுது வந்துவிடும் (நார் வந்தால் எடுத்துவிடவும்).

பாசிப் பருப்பைச் சுத்தம் செய்து கொஞ்சம் தண்ணீர்விட்டு முருங்கைக் காய் விழுதையும், அதில் போட்டு மூடி குக்கரில் வைத்து 2 சவுண்ட் வைத்து எடுக்கவும்.

கடாயில் கொஞ்சம் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்தெடுத்துத் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டுக் கடுகை வறுக்கவும். உடன் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். வெந்த முருங்கைக் காய் பருப்புக் கலவையை அதில் போட்டுக் கிளறவும். அரைத்த விழுதைக் கலந்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு கலந்து கொதிக்கவிட்டு, கூட்டு பதம் வந்ததும் இறக்கிவிடவும்.

இதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைடுடிஷ் ஆகத் தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.

குறிப்பு: சீதா சம்பத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in