சமையலறை
பதின் பருவக் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு: கோதுமை ரவை புட்டு
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு – 1 கப்
கோதுமை ரவை – அரை கப்
தேங்காய்த் துருவல் – முக்கால் கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பனங்கற்கண்டு – தேவைக்கு
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கேழ்வரகு, கோதுமை ரவை இரண்டையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். கோதுமை ரவையைச் சிறிது உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசறி, 20 நிமிடம் ஊறவையுங்கள். அதேபோல் கேழ்வரகு மாவிலும் உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசறிவையுங்கள். மாவைக் கையில் அழுத்திப் பிடித்தால் பிடிபட வேண்டும், உதிர்த்தால் உதிர வேண்டும். இந்தப் பக்குவத்தில் மாவு இருக்க வேண்டும். இரண்டு வகை மாவையும் சேர்த்து அவற்றுடன் பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுங்கள்.
