

என்னென்ன தேவை?
சத்துக்கஞ்சி மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்
நெய் – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
சத்துமாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த வெல்லத் தண்ணீரை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு அதில் ஏலக்காய்ப் பொடி, உப்பு சேருங்கள்.
பிறகு தீயைக் குறைத்து, வறுத்துவைத்துள்ள சத்துமாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி, கட்டிதட்டாமல் கிளறிக்கொண்டே இருங்கள். மாவு வெல்லத்துடன் நன்றாகக் கலந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தட்டு போட்டு மூடிவிடுங்கள். மாவு ஆறியதும் கையில் சிறிது நெய்யைத் தொட்டுக்கொண்டு சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுங்கள்.