

என்னென்ன தேவை?
பொன்னி பச்சரிசி - 2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
வறுத்துப் பொடிக்க
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியை ஊறவைத்து, உதிரியான சாதமாக வடிக்கவும். வடித்த சாதத்தை ஆறவைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பொடித்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து வதக்கவும். சாதத்தைச் சேர்த்துக் கிளறி, இறக்கவும். சுட்ட அப்பளத்துடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு-லட்சுமி சீனிவாசன்