தலைவாழை- சுவைக்கத் தூண்டும் சேமியா போளி

தலைவாழை- சுவைக்கத் தூண்டும் சேமியா போளி
Updated on
1 min read

பலரும் வேண்டாம் என்று ஒதுக்குகிற பாகற்காயைக்கூட அமிர்தமாகச் சமைக்கும் திறமை சென்னையைச் சேர்ந்த சீதா சம்பத்துக்கு உண்டு. பாரம்பரியத்துடன் புதுமையை இணைத்து இவர் செய்யும் உணவு வகைகள் ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். அதை வதக்கி, இதை அரைத்து என தலை சுற்றும் செய்முறைகள் இல்லாமல் மிக எளிதாகச் சமையல் பக்குவம் கற்றுத் தருவார் இவர். வகைக்கு ஒன்றாக சீதா சம்பத் செய்திருக்கும் உணவு வகைகளை நாமும் செய்து ருசிக்கலாமா?

என்னென்ன தேவை?

சேமியா - 1 கப்

நெய் - கால் கப்

முந்திரித் துண்டுகள் - 2 ஸ்பூன்

திராட்சைத் துண்டுகள் - 2 ஸ்பூன்

சர்க்கரை - ஒன்றரை கப்

ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்

மைதா - 2 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மைதாவில் உப்பைக் கலந்து தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, தனியாக வைத்துவிடவும்.

மைதாவில் உப்பைக் கலந்து தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, தனியாக வைத்துவிடவும்.

கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்தெடுக்கவும். அதே கடாயில் சேமியாவைப் பொன்னிறமாக வறுக்கவும். சேமியா மூழ்கும் அளவு சுடுதண்ணீர் விட்டு வேகும்வரை கிளறவும். சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து வரும்போது சிறிது நெய்விட்டு அடி பிடிக்காது கெட்டியாகக் கிளறி எடுக்கவும். இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைக் கலக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிய எலுமிச்சம் பழ அளவு எடுத்துச் சப்பாத்தியாக இடவும். இதன் மீது 2 ஸ்பூன் அளவு சேமியா பூரணத்தை வைத்து, குழவியால் லேசாக வட்டமாக உருட்டவும்.

சூடான தவாவில் இட்ட சேமியா ஸ்வீட் போளியை நெய்விட்டுப் போட்டு எடுக்கவும். 10 நாட்கள் ஆனாலும் இந்தச் சேமியா ஸ்வீட் போளி கெடாது.

குறிப்பு: சீத சம்பத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in