சோயா உருண்டை வடைகறி

சோயா உருண்டை வடைகறி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சோயா உருண்டைகள் - 1 கப்

கரம் மசாலா - 1 சிட்டிகை

உடைத்த முந்திரிக்துண்டுகள் - 2 டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்

பொட்டுக் கடலை - 3 டீஸ்பூன்

கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய், உப்பு -

தேவையான அளவு

குழம்புக்கு:

தக்காளி, வெங்காயம் - தலா 1

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - கால் கப்

கசகசா - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 2 பற்கள்

மல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

சோயா உருண்டைகளைச் சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்துப் பிழியவும். இதனுடன் முந்திரி, பொட்டுக் கடலை, கரம் மசாலா, சோம்பு, பச்சை மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து வதக்கி, 1 டம்ளர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்க்கவும். மீண்டும் கொதி வந்ததும் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: ராஜகுமாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in