

என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
முருங்கைக் காய் விழுது - 1 கப்
மிளகாய் வற்றல் - 3
பச்சை மிளகாய்த் துண்டுகள் - 1 ஸ்பூன்
இஞ்சித் துண்டு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மூன்று பருப்புகளையும் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து மிளகாய் வற்றல் சேர்த்து, கெட்டியாகக் கொரகொரப்பாக அரைக்கவும். இதில் முருங்கைக் காய் விழுது, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையைக் கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கலவையில் சிறிது எடுத்துத் தட்டி மெதுவாக எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பி விடவும். அரை பதம் வெந்ததும் வடையை எடுத்துவிடவும். மீண்டும் புதிய வடைகளைத் தட்டி போடவும்.
அது அரை பதம் வெந்ததும் புதிய வடைகளைப் எடுத்துவிட்டு முதலில் எடுத்த வடைகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். வடை மொறுமொறுப்பாக வாசனையுடன் வரும். விரும்பினால் வெங்காயம் 1, 2 சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: சீத சம்பத்