

என்னென்ன தேவை?
கம்பு - அரை கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
பிஸ்தா, பாதாம், ஏலக்காய் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கம்புப் பயறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் பாதியளவு பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும். மீதி பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். அதனுடன் வேகவைத்த கம்புப் பயறைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும். பிஸ்தா, பாதாம் பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறவும்.