Last Updated : 19 Dec, 2017 01:11 PM

 

Published : 19 Dec 2017 01:11 PM
Last Updated : 19 Dec 2017 01:11 PM

தலைவாழை: திருக்கார்த்திகை விருந்து! - கந்தரப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 200 கிராம்

புழுங்கல் அரிசி - 50 கிராம்

உளுத்தம் பருப்பு - 50 கிராம்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெல்லம் - 200 கிராம்

தேங்காய் - 1/2 மூடி ( துருவியது )

ஏலக்காய் - 4

எண்ணெய் - தேவையான அளவு ‘

எப்படிச் செய்வது

முதலில் அரிசி மற்றும் பருப்பு வகைகளைத் தண்ணீரில் நன்கு அலம்பி தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள், பின்பு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஊற வைத்த அரிசி, பருப்பு, தேங்காய் துருவல் , வெல்லம், ஏலக்காய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் , குழிக்கரண்டியால் மாவை ஊற்றிப் பொன்னிற அப்பமாகச் சுட்டெடுக்கவும். கந்தனுக்குப் படைக்கும் சுவையான கந்தரப்பம் தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x