

பச்சரிசி - அரை கப்
பாசிப் பருப்பு - அரை கப்
வெல்லம் - ஒண்ணேகால் கப்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
பாசிப் பருப்பை லேசாக நெய்யில் வறுத்து அரிசியுடன் கலந்து அரைமணி நேரம் ஊறவையுங்கள். கனமான பாத்திரத்தில் இவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக வேகவையுங்கள். பிறகு கரண்டியால் மசித்துவிடுங்கள். வெல்லத்தைத் தூளாக்கித் தனியாக ஒரு கப் நீரில் கரைத்து ஒரு கனமான பாத்திரத்தில் கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். மசித்து வைத்துள்ள அரிசி -பருப்பு கலவையை அதில் கலந்து, கட்டியில்லாமல் கிளறி கொதிக்கவிடுங்கள். தேங்காய்த் துருவலில் சிறிது நீரும் ஒரு டீஸ்பூன் பச்சரி மாவும் கலந்து, மிக்ஸியில் அரைத்துப் பால் எடுங்கள்.
முதல் பாலைத் தனியாக வைத்து, இரண்டாம் முறை ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டாவது பால் எடுத்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே கொதித்து கெட்டியாக வைத்துள்ள கலவையில் இரண்டாம் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பிறகு முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஏலப் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்தால் சுவையான பாயசம் தயார்.