

என்னென்ன தேவை?
கருப்பு உளுந்து, கேழ்வரகு,
கம்பு, வெள்ளை சோளம், பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 50 கிராம்
வெல்லம் - சிறிதளவு
மிளகு, சீரகப்பொடி - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தானிய வகைகளை காலையில் ஒன்றாக ஊறவைக்கவும். மாலையில் தண்ணீர் வடித்து, தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைக்கவும். இனிப்புப் பிரியர்களாக இருந்தால் மாவுடன் வெல்லத்தைச் சேர்த்துக் கரைக்கலாம். காரப் பிரியர்கள் மிளகு, சீரகப் பொடியைச் சேர்க்கலாம். தோசைக் கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, மாவை தோசையாக வார்த்து எடுக்கவும். இந்தத் தானிய தோசை, மணமும் சுவையும் கலந்து மயக்கும். வேதாரண்யம் பகுதியில் இதை ஆடி அமாவாசையன்று செய்வார்கள்.