

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் மிளகோரை, இந்த ஊர் மக்களிடையே பிரசித்தி பெற்றது. நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்கும் மிளகோரை செய்முறை.
பச்சரிசி - 400 கிராம்
மிளகு - 25 கிராம்
தனியா - 25 கிராம்
கடலைப் பருப்பு - 10 கிராம்
உளுந்து - 10 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆறவிடுங்கள். பிறகு, ரவை பதத்துக்குப் பொடித்துக்கொள்ளுங்கள். பின்னர், பச்சரிசியைச் சாதமாக வடித்து தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு உளுந்தைப் போட்டுத் தாளித்து, ஆறவைத்துள்ள சாதத்தின் மீது கொட்டுங்கள். ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைத் தூவி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாமல் லேசாகப் புரட்டியெடுத்தால் ருசியான மிளகோரை தயார்.
வரதராஜப் பெருமாளுக்குப் படைக்கப்படும் உணவுகளில் மிளகாய் சேர்க்கப்படுவதில்லை. அதனால் பிரசாதங்களில் காரத்துக்கு மிளகு மட்டுமே சேர்க்கப்படுகிறது.