மணக்கும் நெல்லை! - சுண்டைக்காய்த் துவையல்

மணக்கும் நெல்லை! - சுண்டைக்காய்த் துவையல்
Updated on
1 min read

பச்சை சுண்டைக்காய் - 1 கப்

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி - 1 எலுமிச்சை அளவு

பெருங்காயத் தூள்

- அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடுகு, வெல்லத் தூள்

- தலா ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 50 கிராம்

பூண்டு - 6 அல்லது 7 பல்.

பச்சை சுண்டைக்காயை நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு, அது வெடித்தபின் பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பாதி வதங்கியபின் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, பூண்டையும் நசுக்கிச் சேர்த்து வதங்குங்கள். நசுக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து வதக்கி, ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மூடிவையுங்கள்.

பிறகு புளித் தண்ணீர், பெருங்காயம் போட்டுக் கொதிக்கவிடுங்கள். நன்றாக நீர் வற்றியபின் வெல்லத் தூளைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின் விழுதாக அரையுங்கள். மீதமுள்ள நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கிளறியெடுங்கள். இது ஜீரணத்துக்கு நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in