

உளுந்து சாதமும் நெல்லையின் அடையாளம்தான் என்று சொல்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ. பாரதி ரதி. நெல்லையின் சில பாரம்பரிய உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் இவர்.
வற்றல் குழம்பு
என்னென்ன தேவை?
மிளகாய் வற்றல் - 7
தனியா - 2 டேபிள் ஸ்பூன
மிளகு - 1 டீஸ்பூன
சீரகம் - 2 டீஸ்பூன
வெந்தயம் - கால் டீஸ்பூன
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன
புளி - எலுமிச்சை அளவ
உப்பு - தேவையான அளவ
நல்லெண்ணெய் - ஒரு குழிக் கரண்டி
வெங்காய வடகம் - சிறிதளவ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 முதல் 15 பல
சுண்டை வற்றல் அல்லது மணத்தக்காளி வற்றல் - 2 டேபிள் ஸ்பூன
கடுகு, உளுந்து - சிறிதளவ
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எப்படிச் செய்வது?
மிளகாய் வற்றல், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடலைப் பருப்பு, பச்சரிசி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிது எண்ணெய்யில் நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்து வடிகட்டி, அரைத்த விழுதை அதில் கரைத்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவையுங்கள். வெங்காயம், பூண்டு, சுண்டை வற்றல் ஆகியவற்றை எண்ணெய்யில் வதக்கி சேர்க்க வேண்டும். சிறிது எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வடகத் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக்கொட்டுங்கள். குழம்பு நன்றாக வற்றியவுடன் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.