மணக்கும் நெல்லை! - சத்துமாவு லட்டு

மணக்கும் நெல்லை! - சத்துமாவு லட்டு
Updated on
1 min read

சோயா பீன்ஸ், கேழ்வரகு, கொண்டைக்கடலை - தலா அரை கிலோ

பச்சைப் பயறு, சம்பா கோதுமை ரவை - தலா அரை கிலோ

புழுங்கல் அரிசி அல்லது சம்பா அரிசி - அரை கிலோ

உளுந்து - கால் கிலோ

சர்க்கரை - 1 கப்

பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 20

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு

நெய் - அரை கப்

சோயா, கேழ்வரகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, சம்பா கோதுமை ரவை, அரிசி, உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக அரைத்து மாவாக்கிக்கொள்ளுங்கள். சர்க்கரை, முந்திரி, பாதாம் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொடித்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு மாவுடன் வறுத்த முந்திரி, பாதாம் பொடிகளைச் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இத்துடன் பொடித்த சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் மற்றொரு வாணலியில் அரை கப் நெய்யை விட்டு, நன்றாகச் சூடாக்கி இந்த மாவுடன் சேர்த்துக் கிளறி மூடி வையுங்கள். அரை மணிநேரம் கழித்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in