செட்டிநாட்டின் சிறப்புச் சுவை: கும்மாயம் மாவு

செட்டிநாட்டின் சிறப்புச் சுவை: கும்மாயம் மாவு
Updated on
1 min read

செட்டிநாடு கட்டிடக் கலைக்கு இணையாகச் செட்டிநாட்டு உணவுகளும் நொறுக்குத் தீனிகளும் புகழ்பெற்றவை. பாரம்பரிய செட்டிநாட்டுப் பலகாரங்கள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் காரைக்குடியைச் சேர்ந்த சொ.அழகு லட்சுமி.

கும்மாயம் மாவு

உளுந்து- 600 கிராம்.

பாசிப்பருப்பு - 200 கிராம்.

பச்சரிசி - 200 கிராம்.

இரும்புச்சட்டியில் இவை எல்லாவற்றையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து, மிஷினில் திரித்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கும்மாய மாவு - 100 கிராம்

கருப்பட்டி அல்லது வெல்லம் - 150 கிராம்

நெய் - 100 கிராம்.

இருப்புச்சட்டியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு மாவைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துவிடுங்கள். வெல்லம் அல்லது கருப்பட்டியைக் கால் டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்த பின்பு வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஆறிய பாகில் வறுத்த மாவைச் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மிதமான சூட்டில் வைத்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். மொத்த நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்துக் கிளறி கெட்டியானவுடன் இறக்கிவைத்து அதன் மேல் சிறிது நெய் தடவ வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in