தலைவாழை: குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் சோள கீர்

தலைவாழை: குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் சோள கீர்
Updated on
3 min read

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்தே சமையல் அமையும். அவர்களுக்குப் பிடிக்காத காய்கறிகளைக்கூட அவர்களுக்குப் பிடித்த உணவோடு கலந்து செய்யும் வித்தையைப் பெற்றோர் பலர் தெரிந்துவைத்திருக்கிறார்கள். குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று குழந்தைகளை மகிழ்விக்காமல் இருக்க முடியுமா? குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் நிறைந்த உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன். அவற்றில் தேர்ந்தெடுத்த உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இனிப்புச் சோள கீர்

12CHLRD_CORN100 

உதிர்த்த இனிப்புச் சோளம் - 1கப்

பால் - 3 கப்

சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

பாதாம் துண்டுகள்,

உலர்ந்த திராட்சை - அலங்கரிக்க

குங்குமப் பூ - சிறிதளவு

சூடு மிதமாக உள்ள பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் குங்குமப் பூவைப் போட்டுவையுங்கள். நெய்யில் சோளத்தை வதக்கிக்கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் சோளத்தைத் தனியே வைத்துவிட்டு மீதியை அரைத்துக்கொள்ளுங்கள். பாலை நன்றாகக் காய்ச்சி, அரைத்து வைத்திருக்கும் சோள விழுதைச் சேர்த்து வேகவிடுங்கள். சோளம் நன்றாக வெந்ததும் சர்க்கரை, குங்குமப் பூ கலந்த பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கிவிடுங்கள். மேலே பாதாம், உலர்ந்த திராட்சை இரண்டையும் தூவி அலங்கரித்தால் சுவையான சோள கீர் தயார்.

தயிர் இட்லி

12CHLRD_CURD_IDLY_100 

மினி இட்லி - 20

தயிர் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறு துண்டு

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய்த் துருவல்

- இரண்டு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - அரை டீஸ்பூன்

ஊறவைத்துத் தோல் நீக்கிய

பாதாம் பருப்பு - 9

எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை

(பொடியாக நறுக்கியது)

- ஒரு டேபிள் ஸ்பூன்

கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

காராபூந்தி - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், உப்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கடைசியாக பாதாம் பருப்பைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். தயிரை நன்றாகக் கடைந்து, அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை,பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, தயிர்க் கலவையில் கொட்டிக் கலந்துகொள்ளுங்கள். இட்லியை அதில் போட்டு மேலே கொத்தமல்லித் தழை, கேரட், காராபூந்தி தூவி அலங்கரியுங்கள்.

பாலக் சூப்

12CHLRD_PALAK100 

பாலக் கீரை (பொடியாக நறுக்கியது) - 3 கப்

முளைகட்டிய பச்சைப் பயறு

- அரை கப்புக்குச் சற்றுக் குறைவாக

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

சமையல் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்

எண்ணெயில் கீரை, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி, ஆறியதும் அவற்றுடன் மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெயில் சீரகம் தாளித்துப் பின் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கி பிறகு பச்சைப் பயறு, தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் அரைத்த கீரை விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறுங்கள். தேங்காய்ப் பாலுக்குப் பதில் பசும்பாலும் சேர்க்கலாம்.

மசாலா பகோடா

12CHLRD_PAKODA100 

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

துருவிய பனீர் - அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது- இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஓமம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை

- சிறிதளவு

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - அரை டீஸ்பூன்

வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

சமையல் சோடா - கால் டீஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

வாயகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் சமையல் சோடாவைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஓமம், பனீர் ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். கடைசியாகக் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்துகொள்ளுங்கள். தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுங்கள். பகோடா நன்றாகப் பொன்னிறமாக வந்ததும் சூடாகப் பரிமாறுங்கள். கடையில் பனீர் வாங்குவதைத் தவிர்த்துப் பாலைக் காய்ச்சி அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தயிர் சேர்த்துப் பாலைத் திரியவைத்து வடிகட்டிப் பனீர் செய்து பயன்படுத்துங்கள்.

உருளை மாதுளை சாலட்

12CHLRD_POTATO100 

உருளைக் கிழங்கு - 400 கிராம்

மாதுளம் பழம் - ஒன்று

தக்காளி,வெங்காயம் - தலா ஒன்று

எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன்

புதினா இலைகள் - சிறிதளவு

சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கருப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சம் பழம் - ஒன்று

வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை

- இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in