

என்னென்ன தேவை?
பால் - 200 மி.லி.
பாசிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 50 கிராம்
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது?
தேங்காயைத் துருவி வெறும் வாணலியில் லேசாக வெதுப்பிக்கொள்ளவும். பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துக்கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். இறக்கி வைத்து, பொடித்த பொடிகளைச் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும்.
மீண்டும் அடுப்பிலேற்றி நன்றாகக் கிளறவும். இடையிடையே நெய் விட்டுக்கொள்ளவும். நன்றாகச் சேர்ந்து வந்ததும் தட்டிய ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும். அகலமான தட்டில் கொட்டி, வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.