

சுண்டைக்காய் - அரை கப்
தக்காளி - 4
புளி - 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
வறுத்த வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
அரிசி மாவு - அரை டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
சுண்டைக்காயைக் காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். அதில் சுண்டைக்காய் சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், அரிசி மாவு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள். பின் தக்காளிச் சாறு, புளிக்கரைசல் சேர்த்துத் தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு, இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். இந்தப் பஞ்சரத்தினக் குழம்பின் சுவை புதிது.