Published : 27 Nov 2017 11:59 AM
Last Updated : 27 Nov 2017 11:59 AM

மதுரை கோனார் மெஸ்

மதுரை சிம்மக்கல் கோனார் கடை, மதுரையின் பாரம்பரிய அசைவ உணவுக்குப் பெயர்பெற்றது. அங்கு கிடைக்கும் சில உணவுகள்.

வெங்காயக் கறி தோசை

26CHLRD_rajendran ராஜேந்திரன்

ப்போதும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் தோசை முக்கியமானது. மதுரை ஹோட்டல்களில் தோசைகளில் விதவிதமான வகைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து உணவுப் பிரியர்களை அசத்துகிறார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் மதுரை ‘கறி’ தோசை உணவுப் பிரியர்களிடையே பிரபலமாக இருந்தது. அதுவும், சிம்மக்கல் கோனார் கடை ‘கறி’ தோசை ரொம்ப பிரபலம். தற்போது அவர்களே ‘வெங்காயக் கறி தோசை’ என்ற தோசை வகையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இந்தக் கடையின் உரிமையாளர் எஸ்.எம்.ராஜேந்திரன், வெங்காயக் கறி தோசையைப் பற்றிக்கூறினார்:

“கறி தோசைக்குக் கிடைத்த வரவேற்பால் வெங்காயக் கறி தோசை என்ற புதிய வகையை அறிமுகம் செய்தோம். கல்லில் தோசை மாவை ஊற்றி அதற்கு மேல் மட்டன் குருமா, வெங்காயம், முட்டை ஊற்றினால் வெங்காயக் கறி தோசை ரெடி. இந்த தோசைக்காகவே மட்டன் குருமாவை பிரத்யேகமாகத் தயாரிக்கிறோம். ’’ என்றார்.

எலும்பு ரோஸ்ட்

தோசைகளைத் தவிர எலும்பு ரோஸ்ட்டும் கோனார் கடையில் பிரபலம்.

‘‘எலும்புகளை நன்கு வேகவைப்போம். அதனுடன் கொஞ்சம் மிளகு, செக்கு எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எலும்பு ரோஸ்ட் செய்கிறோம். முன்னதாகத் தோசைக் கல்லில் மிளகு, மல்லி, மசாலா போட்டு நன்கு வதக்கி வைத்துக்கொள்வோம்.

இந்த எலும்பு ரோஸ்ட்டில் கிடக்கும் எலும்புகளைச் சின்ன குழந்தைகள்கூடக் கடித்துச் சாப்பிடலாம். இதற்காகவே கரூர் மாவட்டம் மணமேடு கிராமத்தில் இருந்து இளம் ஆடுகளை வரவழைத்து அவற்றின் எலும்புகளைக் கொண்டு இந்த எலும்பு ரோஸ்ட் தயாரிக்கிறோம், ’’ என்றார்.

குடல் குழம்பு

ந்தக் கடையில் கிடைக்கும் குடல் குழம்பும் பிரத்யேக சுவை கொண்டது. குடல்கள் வாடை அடிக்காமல் இருக்க நன்கு தண்ணீரில் அலசி இவர்களே தயாரிக்கும் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி ஆகியவற்றோடு தேங்காயையும் சேர்ந்து குடல் குழம்பு செய்வதால்தான் இந்தச் சிறப்பு என்கிறார் ராஜேந்திரன்.

அதுபோல் கோனார் கடையில் கிடைக்கும் மட்டன் சுக்காவையும் அசைவப் பிரியர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். கறி தோசை, வெங்காயக் கறி தோசைக்கான சைட் டிஷ்ஷாகவே இவர்கள் மட்டன் சுக்கா தயாரிக்கிறார்கள். “மட்டன் சுக்கா தயாரிக்க, நாங்கள் ரெடிமேடு மிளகாய் பவுடர் பயன்படுத்துவதில்லை. மிளகாயை வாங்கிக் கையால் அரைத்துப் பொடியாக்குகிறோம். அந்தப் பொடியுடன் மல்லி, தேங்காய், மிளகு, செக்கு எண்ணெய்யையும் சேர்த்து மட்டன் சுக்கா தயாரிப்பதால் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்” என்கிறார் ராஜேந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x