

வெள்ளைப் பூசணிக்காய் - 1 துண்டு
மஞ்சள் பூசணிக்காய் - 1 துண்டு
பழுத்த வெள்ளரிக்காய் - 1 துண்டு
(கிடைத்தால்)
புளி - 1 எலுமிச்சையளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மல்லி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய், பெருங்காயம்,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
புளியைக் கரைத்து வடித்துக்கொள்ளுங்கள். காய்களைத் தோல் நீக்கிச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். நறுக்கிய காய்களை மஞ்சள் தூள், உப்பு, தேவையானளவு தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கள் வெந்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கிவையுங்கள். சுவையும் மணமும் நாவூறச் செய்யும்.