கொள்ளை கொள்ளும் கொள்ளு உணவு: கொள்ளுப் பருப்பு மசியல்

கொள்ளை கொள்ளும் கொள்ளு உணவு: கொள்ளுப் பருப்பு மசியல்
Updated on
1 min read

நம் முன்னோரின் சமையலில் சிறுதானிய உணவுக்கு இணையாகப் பயறு வகைகளுக்கும் இடம் இருந்தது. தற்போது தினசரி சாப்பாட்டில் பயறு வகைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. அதுவும் கொள்ளு போன்ற பயறை உடல் இளைக்க மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் திறன் உட்பட பல்வேறு நன்மைகளைக் கொண்டது கொள்ளு. துவையலோடு மட்டும் நிறுத்திவிடாமல் கீர், கட்லட் என புதுமையான கொள்ளு உணவு வகைகளைச் சமைக்கலாம் என்று சொல்வதோடு அவற்றைச் சமைக்கவும் கற்றுத்தருகிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ்.

கொள்ளுப் பருப்பு மசியல்

கொள்ளு - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 6 பல்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்

கொள்ளுவை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகிய மூன்றையும் நறுக்கிச் சேர்த்து குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள், நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் விட்டு நான்கு முதல் ஐந்து விசில் விட்டு வேகவைக்க வேண்டும். அத்துடன் உப்பு, மல்லித்தழையைச் சேருங்கள். வாணலியில் நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்க வேண்டும். தாளித்த பொருட்களை குக்கரில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கிவையுங்கள். இதைச் சோற்றில் ஊற்றிச் சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in