

என்னென்ன தேவை
கொள்ளு - 50 கிராம் (வறுத்து வேக வைக்கவும்)
கத்திரிக்காய் -4
முருங்கைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது நன்றாக வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க வைத்து இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.