கொள்ளை கொள்ளும் கொள்ளு உணவு: கொள்ளு கட்லட்

கொள்ளை கொள்ளும் கொள்ளு உணவு: கொள்ளு கட்லட்
Updated on
1 min read

முளைகட்டிய கொள்ளு, பாசிப் பயறு - தலா அரை கப்

உருளைக் கிழங்கு - அரை கப்

வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - அரை கப்

பெரிய வெங்காயம் - 2

கோஸ், கேரட், பீட்ரூட் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பனீர் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் - தலா ஒரு டீஸ்பூன்

மைதா, சோள மாவு - தலா அரை டேபிள் ஸ்பூன்

பிரெட் தூள் - தேவையான அளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

புதினா - சிறிதளவு

கொள்ளுவையும் பாசிப் பயறையும் வேகவைத்து லேசாக மசிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கோஸ், கேரட், பீட்ரூட் துருவல், குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா, புதினா, கொள்ளு, பாசிப் பயறு, உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள். இறுதியாக பனீர் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.

இந்தக் கலவை ஆறியதும் பிடித்த வடிவங்களில் உருட்டிக்கொள்ளுங்கள். மைதா, சோள மாவு சிறிது உப்புடன் தண்ணீர்விட்டுக் கரைத்து அதில் உருண்டைகளைத் தோய்த்து, பிரெட் துளில் புரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால் சுவையான கொள்ளு கட்லட் ரெடி. இதை மல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுச் சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in