

பேரீச்சம் பழம் - 10
வாழைப் பழம் - 1
ஆப்பிள், கொய்யா - தலா 1
எலுமிச்சைப் பழச் சாறு - ஒரு டீஸ்பூன்
தேன் - இரண்டு டீஸ்பூன்
வெண்ணெய் - கால் கப்
பிரெட் துண்டுகள் - 8
பேரீச்சம் பழத்தை ஒரு மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவையுங்கள். பின்னர், அந்தத் தண்ணீரை வடித்துவிட்டுப் பழத்தை மிக்ஸியில் போட்டு மசித்துக்கொள்ளுங்கள். பின் மற்ற பழங்களைச் சேர்த்து மசித்து, தேன் கலந்து பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்யுங்கள்.