

என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி சாதம் - 2 கப்
முந்திரி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு- 3 பல்
நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கைப்பிடி
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அவற்றுடனேயே பொடியாக நறுக்கிய முந்திரி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் சாதத்தைக் கொட்டிக் கிளறி, இறக்கவும்.