

நாட்டுக்கோழிக் கறி - அரை கிலோ
தேங்காய்த் துருவல் - அரை மூடி
நெய் அல்லது நல்லெண்ணெய்
- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள்
- அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
கிராம்பு - 3
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வெள்ளை மிளகு - 1 டீஸ்பூன்
பல்லாரி வெங்காயம் -2
பூண்டுப் பல் - 6
கிராம்பு -2
ஜாதிபத்திரி -1 துண்டு
இஞ்சி -சிறு துண்டு
தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்துக்கொள்ளளுங்கள்.கோழிக்கறியைச் சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள், தயிர், முதலாவதாக வறுத்து அரைத்துவைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் அதை குக்கரில் போட்டு வேகவையுங்கள். கறி வெந்ததும் குக்கரைத் திறந்து அப்படியே மிதமான சூட்டில் வைத்து மசாலா கெட்டியானவுடன் எடுத்துவிடுங்கள்.
கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும் இரண்டாவதாக வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் வேகவைத்துள்ள கோழிக்கறி மசாலாவைச் சேர்த்து மிதமான தீயில் கெட்டியாகும்வரை வதக்கி, கடைசியாக வறுத்த தேங்காய்த் துருவலைத் தூவி இறக்கினால் அருமையான குடந்தை கடாய் சிக்கன் தயார்.