

என்னென்ன தேவை?
கொள்ளு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
புளி - எலுமிச்சை பழம் அளவு
மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைகேற்ப
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லி இலை - சிறிதளவு
எப்படிச் செய்வது
கொள்ளுவை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். துவரம் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரண்டும் நன்றாக ஊறிய பிறகு சிறிதளவு உப்பு, ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறு வடைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் இந்த வடைகளை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகு, சீரகப் பொடி, நசுக்கிய பூண்டு 3 பல் சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளித்து ரசத்தில் கொட்டுங்கள். சிறிதளவு மல்லி இலைகளை அதன் மேல் லேசாக தூவி விடுங்கள் வறுத்து வைத்துள்ள கொள்ளு வடைகளைப் போட்டு இருபது நிமிடங்கள் ஊறியதும் எடுத்து பரிமாறினால் அதன் சுவையே தனி.