Published : 20 Jun 2014 10:21 AM
Last Updated : 20 Jun 2014 10:21 AM

தொண்டு நிறுவன காப்பகத்தில் 118 பேர் இறந்ததாக அதிர்ச்சி புகார்: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை அக்ஷயா தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் ஓராண் டில் 118 பேர் மர்மமான முறை யில் இறந்ததாக உயர் நீதிமன்றத் தில் தாக்கலான மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த காப்பகத்தி லிருந்து இளம்பெண் ஓடியது தொடர்பாக விசாரிக்க பெண் ஏ.டி.எஸ்.பி.யை நியமித்தும், காப்ப கத்தில் ஆய்வு நடத்தவும் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தர விட்டுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்ட தலைவர் சி.முத்துராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கொடிமங்கலத்தில் உள்ள அக்ஷயா தனியார் தொண்டு நிறு வனத்துக்கு சொந்தமான காப்பகம் உள்ளது. இதிலிருந்து மெகர்நிஷா (21) என்ற பெண், ஜூன் 5-ம் தேதி நிர்வாணமாக வெளியே ஓடி வந்தார். காப்பகத்தில் பெண் கள் பலாத்காரம் செய்யப்படுவதாக வும், உடல் உறுப்புகள் திருடப்படுவ தாகவும் அவர் புகார் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் குழு நடத்திய விசாரணை யில், காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப் பது தெரிந்தது காப்பகத்தில் தங்கியி ருந்தவர்களில் 118 பேர் ஓராண்டில் இறந்ததும், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடத்தாமல் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித் தோம். அந்த பெண் மனநலம் பாதிக் கப்பட்டவர் என ஆட்சியர் தெரி வித்தார். இருப்பினும் காப்பகத்தில் நடைபெறும் முறைகேடு தொடர் பான புகார் குறித்து விசாரிப்ப தாகவும் அவர் கூறினார். ஆனால் இதுவரை உறுதியான நட வடிக்கை எடுக்கப்படவில்லை. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத் தின்கீழ் வழக்கு பதியவில்லை.

எனவே அக்ஷயா காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொந் தரவு அளிக்கக்கப்படுவது தொடர் பான குற்றச்சாட்டு குறித்து பணியிலுள்ள மாவட்ட நீதிபதியை வைத்து விசாரிக்கவும், காப்ப கத்தில் தங்கியிருக்கும் மற்ற பெண் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், பெண் நிர்வாணமாக ஓடியது தொடர்பாக டி.எஸ்.பி. அந்தஸ்தில் அதிகாரியை நிய மித்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், தமிழகம் முழு வதும் உள்ள அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் ஆய்வு நடத்தி அங்கு தங்கியிருப்போரின் பாது காப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காப்பகத்தில் பெண் நிர்வாணமாக ஓடியது சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. சியாமளாதேவி விசாரணை நடத்த வேண்டும். காப்பகத்துக்கு வழக் கறிஞர் ஆணையர் டி.கீதா நேரில் சென்று, ஆய்வு நடத்தி ஜூன் 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x