Published : 04 Mar 2014 11:17 AM
Last Updated : 04 Mar 2014 01:26 PM
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து யாரிடம் வேண்டுமானாலும் பேசுவதற்கு தேமுதிக தயார் நிலையில் இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து திங்கள் கிழமை இரவு விஜயகாந்த் சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டாலும், மாநில அரசு அவர்களை விடுவிக்கும் என்றாரே, ஆனால் இன்னும் ஏன் 7 பேர் விடுதலையாகவில்லையே" என்றார்.