Published : 09 Oct 2014 10:39 AM
Last Updated : 09 Oct 2014 10:39 AM
‘இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா? கட்டுரை வாசித்தேன். உண்மையை உரைக்கும் கட்டுரை. நிலம், மின்சாரம் மற்றும் வரிச்சலுகைகள் அனைத்தும் அளித்து, வெளிநாட்டிலிருந்து ஆலைகளை அழைக்கிறோம். அவை இங்குள்ள சட்ட திட்டங்களையும் மனித உரிமைகளையும் மதிப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இயங்கிவந்த ஒரு கைபேசி உற்பத்தி ஆலையில், ஓர் இளம் பெண் தொழிலாளி இயந்திரத்தில் மாட்டிக்கொண்டதும், அவரைக் காப்பாற்ற உடனடியாக இயந்திரத்தை உடைக்க நிர்வாகம் மறுத்துவிட்டதையும், அப்பெண் பரிதாபமாக இறந்ததையும் அறிவோம். உயிர்களைப் பறித்துவிட்ட பின்பு யாருக்காக ஆலை?
பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது, அவற்றுக்குத் தொந்தரவு அளிக்காமல் இருப்பது, அவற்றின் நிர்வாகத்தை மேம்படுத்துவது, உள்நாட்டுத் தனியார் ஆலைகளைக் கண்காணிப்பது, ஆகியவையே நாம் உடனடியாகச் செய்ய வேண்டியவை.
- இரா. குப்புசாமி,தாராபுரம்.