Published : 24 Sep 2014 09:38 AM
Last Updated : 24 Sep 2014 09:38 AM

இந்தியா எழுச்சிபெற புதுமையான முயற்சிகள் தேவை: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து

இந்தியா மீண்டும் எழுச்சிபெற புதுமையான யோசனைகளையும், அது தொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

டெல்லியில் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: புதுமையான யோசனைகளையும், அது தொடர் பான முயற்சிகளையும் முன் னெடுத்துச் சென்றால்தான் இந்தியா எழுச்சி பெறும். வழக்க மாக இருக்கும் முறையை கடைப் பிடிப்பது இனி பலன்தராது. பண்டைய காலத்தில் அறிவுத்தளத் தில் இந்தியர்கள் பிற நாட்டின ருக்கு முன்னோடிகளாக இருந்த னர். ஆனால், காலனியாதிக்கத்தி லிருந்து விடுபட்ட பிறகு, தொழில் நுட்பத் துறையில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது.

உலகுக்கே வழிகாட்டிய நாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பிற நாட்டினரை பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

நாட்டில் மனிதவள ஆற்றல் அபரிமிதமாக உள்ளது. அதை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். இப்போது இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கும் வரவேற்பு உள்ளது. 1960-களிலும், 1970-களி லும் அமெரிக்கா, ஐரோப்பியா கண்டங்களுக்குச் சென்ற நம் நாட்டினர், அங்குள்ள தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். அதேபோன்று, கம்ப்யூட்டர், சுகாதாரம், மருந்து தயாரிப்பு, வணிக மேலாண்மை நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

எங்களுக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் நிதிப் பற்றாக்குறையும், வர்த்தகத்துறை யில் பின்னடைவும் ஏற்பட்டது. அந்நிலையை நாங்கள் மாற்றி வருகிறோம்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x