Published : 22 Jul 2014 10:00 am

Updated : 22 Jul 2014 11:50 am

 

Published : 22 Jul 2014 10:00 AM
Last Updated : 22 Jul 2014 11:50 AM

மகாராஷ்டிரா, அசாம் முதல்வர்கள் மீது அதிருப்தி: அமைச்சர்கள் ராஜினாமா

மாநில முதல்வர்களின் செயல்பாடு களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாராஷ்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, அசாம் மாநில கல்வித் துறை அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா ஆகியோர் தங்களின் பதவி களை திங்கள்கிழமை ராஜினாமா செய்தனர்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நாராயண் ரானே, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் பதவியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் கட்சியின் தேசியத் தலைமை எடுக்கவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் முதல்வர் பிருத்விராஜ் சவாணை சந்தித்த நாராயண் ரானே, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நாராயண் ரானே கூறியதாவது: “முதல்வர் பிருத்விராஜ், முக்கிய விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதில் தாமதம் செய்கிறார். ஆட்சி நிர்வாகத்தை அவரால் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.

அரசு இயந்திரத்தின் மெதுவான செயல்பாடு காரணமாக மக்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு மீதான மக்களின் அதிருப்தி, மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்தது.

இப்படியே தொடர்ந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கட்சி படுதோல்வி அடையும். அந்த தோல்வியில் கூட்டாளியாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே, எனது பதவியை ராஜி னாமா செய்துவிட்டேன். எனது ராஜினாமாவை ஏற்க மறுத்த பிருத்விராஜ் சவாண், இது குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் பேசிவிட்டு பதிலளிப்பதாக கூறினார். இப்போதைக்கு கட்சியிலிருந்து விலகும் எண்ணம் ஏதுமில்லை.

2005-ம் ஆண்டு சிவசேனை கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தபோது, 6 மாதத்தில் எனக்கு முதல்வர் பதவி தருவதாக கட்சித் தலைமை தெரிவித்தது. ஆனால், 9 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. என்னுடன் காங்கிரஸில் சேர்ந்த ஆதரவாளர்கள் ஒருவர்கூட எம்.எல்.ஏ. ஆவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை” என்றார்.

ரானேவின் மகன் நிலேஷ் கடந்த மக்களவைத் தேர்தலில் ரத்னகிரி – சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதற்கு தார்மிக பொறுப்பேற்று கடந்த மே மாதம் நாராயண் ரானே, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அதை கட்சித் தலைமை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அசாமில் ஹிமான்டா பிஸ்வா

அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா, ஆளுநர் ஜே.பி.பட்நாயக்கை திங்கள் கிழமை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் ஹிமான்டா பிஸ்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அசாம் முதல்வர் தருண் கோகோயின் செயல்பாடுகளை கண்டித்து எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடன் 38 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர். நாங்கள் அனை வரும் தருண் கோகோயின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்ப்போம். அதே சமயம் கட்சி யின் தேசிய தலைமை பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்.

அசாம் மாநில ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை. தருண் கோகோய் தலைமையில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் படுதோல்வி அடையும். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கும் விரைவில் அனுப்பவுள்ளேன்” என்றார். இதற்கு முன்பு ஒருமுறையும் ஹிமான்டா பிஸ்வா ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அதை காங்கிரஸ் கட்சித் தலைமை ஏற்கவில்லை.

ராகுலுக்கு எதிரானதா?

நாராயண் ரானே, ஹிமான்டா பிஸ்வா சர்மா ஆகியோரின் நட வடிக்கை ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு எதிரானவை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அவர்களின் செயல் ராகுலுக்கு எதிரானது அல்ல. முதல்வர்களின் செயல் பாடு பிடிக்காததால்தான் அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே சமயம், கட்சியின் பெரும்பா லான எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர்” என்றார்.

மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர்நாராயண் ரானேஅசாம் கல்வித் துறை அமைச்சர்ஹிமான்டா பிஸ்வா சர்மாஅமைச்சர்கள் ராஜினாமா

You May Like

More From This Category

More From this Author