Published : 09 Jul 2014 11:29 am

Updated : 09 Jul 2014 11:29 am

 

Published : 09 Jul 2014 11:29 AM
Last Updated : 09 Jul 2014 11:29 AM

கணவர் வீடு முன்பு 5 நாளாக ஆசிரியை போராட்டம்: ‘சேர்ந்து வாழ விருப்பமில்லை’ கணவர் அறிவிப்பு

5

விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சிவகாம சுந்தரி. எம்பிஏ பட்டதாரி. விருத்தாசலத்தை அடுத்த நறுமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் டோம்னிக் அந்தோணி. இருவரும் விருத்தாசலத்தில் ஆசிரியர்களாக பணிபுரிந்தபோது காதலித்துள்ளனர். 2011-ல் கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டு, இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். ஆசிரியை வேலையை சிவகாம சுந்தரி கைவிட்டு, முறைப்படி திரு மணம் செய்துகொள்ள பேசிய போது அந்தோணிகாலம் கடத்தி யுள்ளார். இப்படியே 3 ஆண்டு கழிந்த நிலையில், அந்தோணிக்கு வேறு இடத்தில் தற்போது பெண் பார்ப்பதை சிவகாம சுந்தரி அறிந்தார். இதுகுறித்து, விருத் தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மார்ச் மாதம் புகார் கொடுத்தபோது, விசாரணைக்கு அந்தோணி வரவில்லை. எனவே, வழக்கை சமூக நலத்துறை வசம் போலீஸார் ஒப்படைத்தனர். அதன்பிறகு, சமூக நலத்துறை சார்பாக கவுன்சலிங் நடத்தப்பட்டு இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்து மாறு அறிவுறுத்தப்பட்டது. அடுத்த கட்ட கவுன்சலிங்குக்கு அந்தோணி வரவில்லை. இந்த நிலையில், அந்தோணியிடம் இருந்து விவா கரத்து நோட்டீஸ்தான் வந்தது.

இதனால், சிவகாம சுந்தரி அதிர்ச்சி அடைந்து மீண்டும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். போலீஸாரோ, சமூக நலத் துறையை அணுகுமாறு கூறி விட்டனர். இதனால், மனமுடைந்த சிவகாமசுந்தரி ஜூலை 3-ம் தேதி நறுமணத்தில் உள்ள அந்தோணி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த ஆரோக்கிய மேரி அவரை உள்ளே விட மறுத்துள் ளார். இதனால், கணவர் அந் தோணி வீட்டு வாசலிலேயே தர்ணா போராட்டத்தை சிவகாம சுந்தரி தொடர்ந்து 5 நாட்களாக நடத்தி வருகிறார். மேலும், தனது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கடலூர் ஆட்சியரிடமும் மனு அளித் தார். மனுவை பெற்ற ஆட்சியர், சமூக நலத்துறை மூலமாக விசாரிப்பதாக கூறியுள்ளார்.

வயது பிரச்சினையா?

போராட்டம் நடத்தும் சிவகாம சுந்தரியிடம், உங்கள் கணவர் எதற்காக ‘உங்களை ஏற்க மறுக் கிறார்?’ என கேட்டபோது அவர் கூறியதாவது:

அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரது மனதை மாற்றி வேறு திருமணத்துக்கு வலியுறுத்து கின்றனர். எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன். இருவரும் விரும்பித்தான் திரு மணம் செய்துகொண்டோம். எனக்கும் அவருக்கும் ஒரே வயது தான், எனக்கு வயது அதிகம் என்று கூறுவது தவறு. இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால்தானே பதிவுத் திருமணம் செய்ய முடிந்தது. அவர் விவகாரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. படித்த எனக்கே இந்த நிலை என்றால் படிக்காத பெண்களின் நிலைமையை நினைத்து பார்க்க முடியவில்லை. எனக்கு இந்த கிராம மக்களும் ஊராட்சித் தலை வரும் உணவு அளித்து உறு துணையாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பில் இங்கு தங்கி போராட் டம் நடத்துகிறேன் என்றார்.

கணவர் டோம்னிக் அந்தோணி கருத்து:

சிவகாம சுந்தரி நடத்தும் போராட்டம் குறித்து கணவர் டோம்னிக் அந்தோணியிடம் தொலைபேசி மூலமாக கேட்ட போது, ‘விவாகரத்துக் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். தற் போது சிவகாமசுந்தரி அமர்ந் திருப்பது நறுமணத்தில் உள்ள எனது பெரியப்பா வீடு. எனது தாயார் அந்த வீட்டில் இருந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்தார். எனக்கோ எனது தாயாருக்கோ அங்கு சொந்த வீடு இல்லை. தேவையில்லாமல் அவர் பிரச்சினை செய்வதால், தங்க இடமின்றி விருத்தாசலத்தில் ஒரு லாட்ஜில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை அழைத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்தத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

சமூக நலத்துறை விளக்கம்

சிவகாம சுந்தரி நிலைமைகுறித்து, கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, ‘முதல் கவுன்சலிங்கின்போது, இருவரும் வந்தனர். 2-ம் கட்ட கவுன்சலிங் போது அந்தோணி வரவில்லை. அடுத்த வாரம் 3-ம் கட்ட கவுன்சலிங்குக்கு அழைக்க இருக்கிறோம். இதற்கிடையே, அந்தப் பெண் தர்ணா போராட்டம் நடத்தும் செய்தி கிடைத்துள்ளது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மேலும், பதிவு திருமணம் முடிந்ததும் அவர்கள் முதலில் தங்கியிருந்தது உளுந்தூர்பேட்டை என்பதால் விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறையிடம் புகார் கொடுத்தால் தீர்வு கிடைக்கும்’ என்றார்.

சிவகாமசுந்தரிடோம்னிக் அந்தோணிசமூக நலத்துறை விளக்கம்

You May Like

More From This Category

More From this Author