பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ்

பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ்
Updated on: 
1 min read

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்​துள்ள வெப் தொடர், ‘அக்​கா’. தர்​ம​ராஜ் ஷெட்டி எழுதி இயக்​கி​யுள்​ளார். கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதா​பாத்​திரத்​தி​லும், ராதிகா ஆப்தே ‘ருத்​ரா’ என்ற கதா​பாத்​திரத்​தி​லும் நடித்​துள்​ளனர். இவர்​களு​டன் தன்வி ஆஸ்மி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்​துள்ள இதன் டீஸர் வெளி​யாகி​யுள்​ளது.

1980-களின் பின்​னணி​யில் நடக்​கும் கேங்​ஸ்​டர் தொட​ரான இது, தலை​முறை தலை​முறை​யாகப் பெண்​களால் கட்​டமைக்​கப்​பட்​டு, ஆளப்​பட்​டு, பாது​காக்​கப்​பட்ட பெர்​னூரு என்ற கற்​பனை உலகத்தை அறி​முகப்​படுத்​துகிறது. மாறிவரும் அதி​காரப் போட்​டிகள் மற்​றும் பகைமை​களால் உரு​வான ராஜ்ஜி​யத்​தின் மையமே 2 பெண்​கள்​தான். இத்​தொடர் அக். 30-ல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் வெளி​யாக​வுள்​ளது.

இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்​போது, “இது​வரை நான் நடித்த கதா​பாத்​திரங்​களி​லேயே மிக​வும் தனித்​து​வ​மான மறக்க முடி​யாத கேரக்​டர், இந்த ‘அக்​கா’​வில் இடம்​பெற்​றுள்ள பவானி​தான். இதில் ராதிகா ஆப்​தேவுடன் இணைந்து பணி​யாற்​றியது மகிழ்ச்​சி​யாக இருந்​தது. எங்​களு​டைய கதா​பாத்​திரங்​கள் கதைக்கு சுவாரஸ்​ய​மான பல பரி​மாணங்​களை தரும். இந்​தக் கதை​யின் தனித்​து​வ​மும், அதன் உலக​மும் என்னை ஈர்த்​தது. நிச்​ச​யம் பார்​வை​யாளர்​களுக்​கும் பிடிக்​கும் என நம்​பு​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ்
நடிகர் டைகர் ஷெராஃப் காரின் மீது துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in