

‘முரா’ (Mura) 2024-ஆம் ஆண்டு வெளியான மலையாள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், சுரேஷ் பாபு எழுத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் வசிக்கும் நான்கு நெருங்கிய நண்பர்கள் கல்லூரி படிப்பை முடிக்காமல் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். பணவசதி குறைவால் அவர்கள் உள்ளூர் ரவுடி கும்பலில் சேர்ந்து அனி (சுராஜ் வெஞ்சாரமூடு) என்ற கும்பல் தலைவன் கீழ் பணியாற்றுகிறார்கள்.
ஒரு நாள் அனி, இந்த நான்கு பேரையும் மதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை திருட அனுப்புகிறான். இது அவர்கள் சந்திக்கும் முதல் பெரிய பணி. ஆனால், இந்தப் பணி அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர்கள் வாழ்க்கையின் போக்கை திசைத் திருப்புகின்றன.
திருட்டு திட்டம் எளிதாக ஆரம்பமாகினாலும், அடுத்தடுத்த சம்பவங்கள் கைகூடாமல் போகின்றன. போலீஸார், எதிரி கும்பல், அவர்களது மனச்சாட்சி - இவை அனைத்தும் நெருக்கடியான நிலைகளை உருவாக்குகின்றன. இந்நிலையில் அவர்கள் நட்பு, நம்பிக்கை மற்றும் நியாயம் ஆகியவற்றுக்கு இடையில் போராட வேண்டிய நிலை வருகிறது.
‘முரா’ என்பது நட்பு, தவறான முடிவுகள், வாழ்வின் அதிர்ச்சிகள் மற்றும் சவால்களை உணர்த்தும் இந்தத் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.