Published : 30 Mar 2025 03:46 PM
Last Updated : 30 Mar 2025 03:46 PM
தமிழ் இணையத் தொடர்களில், ‘சோசியல் மெசேஜ்’ சொல்லும் க்ரைம் த்ரில்லர்கள், குடும்பக் கதை டிராமக்கள் அதிகமும் வந்திருக்கின்றன. மற்ற மொழிகளில் முழுநீள நகைச் சுவைத் தொடர்களும் அதிகம்.
தமிழ் சினிமாவிலேயே நகைச்சுவையை துழாவித் தேட வேண்டியிருக்கும்போது அதை இணையத் தொடரில் மட்டும் எதிர்பார்க்க முடியுமா என்ன? ஜீ5 ஓடிடியில் மார்ச் 28 ஆம் தேதி சுடச் சுட வெளியாகியிருக்கும் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ஒரு குற்றச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் ரணகளமான நகைச்சுவைத் தொடர்.
பத்துக் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வைரங்களைத் திருடிக்கொண்டு வரும் நாகரத்தினம் என்பவர், தன்னை போலீஸ் பின் தொடர்வதைத் தெரிந்துகொண்டு, அதைத் தான் வாங்கிய புதுச் செருப்பின் ‘சோல்’ உள்ளே மறைத்து வைத்துவிடுகிறார். அந்தச் செருப்பைப் போட்டுக்கொண்டு போய், கடற்கரைக்குத் தன்னுடைய ஆடிட்டர் தியாகராஜனிடம் அதைக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு போலிஸிடமிருந்து தப்பித்துவிடுகிறார்.
பிறகு வைரங்கள் ஒளித்து வைக்கப்பட்ட செருப்புகள் காணாமல் போய்விடு கின்றன. ஒருபக்கம் வைரத்தைப் பறிகொடுத்த வியாபாரி போலீஸ் உதவியுடன் அதைத் தேட, இன்னொரு பக்கம் தியாகராஜனும் அவருடைய மகனும் வைரம் ஒளித்து வைக்கப்பட்ட செருப்பைத்தேடுகிறார்கள். இந்தத் தேடலின் இறுதியில் வைரம் யார் கையில் சிக்கியது என்பதுதான் 6 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரின் கதை.
ஆடிட்டர் தியாகராஜனாக சிங்கம்புலி, அவருடைய மகன் இளங்கோவாக விவேக் ராஜகோபால், சாவு வீட்டில் விடப்பட்ட அந்தச் செருப்பைத் தேடும்போது கிடைத்த அவரது காதலி வைரமாலாவாக வரும் ஐராவும் ரகளை செய்திருக்கிறார்கள். முதல் எபிசோட் மெல்ல நகர்ந்தாலும் இரண்டாவது எபிசோடிலிருந்து ஜம்மென்று சூழல் நகைச்சுவை மின்னுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT