OTT Pick: The Stoning of Soraya M - கல்லெறிந்து கொல்லுதல்!

OTT Pick: The Stoning of Soraya M - கல்லெறிந்து கொல்லுதல்!
Updated on
1 min read

பழமைவாதத்தால் அழுக்கேறிய மனித மனங்கள் நோய்வாய்ப்பட்டவை. மத அதிகார பீடத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்ட சக மனிதர்களைப் பொது வெளியில் கொடூரமாகக் கொலை செய்வதை அவை எதிர்ப்பதில்லை. மாறாக, அந்தக் கொலையில் பங்குபெறும் வன் மத்தைப் புனிதமாகக் கருதுகின்றன.

நாகரிகம் செழித்து வளர்ந்த ஒரு சமூகத்தில், 20ஆம் நூற்றாண்டில், இன்னும்கூட மதத்தின் பெயரால் பெண்களை ஊர் கூடி கல்லெறிந்து கொல்லும் மரணத்தண்டனைக்கு உள்ளாக்குகி றார்கள். ‘ஸ்டோனிங் ஆஃப் சொராயா. எம்’ (The Stoning of Soraya M), உலக மசாலா சினிமாக்கள் எடுக்கும் ஹாலிவுட்டில் இருந்துகொண்டு, தரமான உலக சினிமாக்களைத் தந்துவரும் சைரஸ் நொராஸ்டேவின் எழுத்து, இயக்கத்தில் 2008இல் வெளிவந்தது.

பல மத அடிப்படைவாத நாடுகள் இப்படத்தைத் தடை செய்தன. உலகப் பட விழாக்கள் கொண் டாடின. 1986இல் ஈரானில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலைத் தழுவி உருவான இந்தப் படத்தை முதலில் அமேசான் பிரைம் வெளியிட்டது.

ஆனால், அங்கும் அரசியல் தலையீடு உள்நுழைந்ததால், ஆசியப் பிராந்தியத்தில் இப்படத்தைக் காண முடியாது. ஆனால், தற்போது இப்படத்தை கலிபோர்னி யாவின் ‘தி ஆர்கைவ்’ தளத்துக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டனர் அதன் தயாரிப்பாளர்கள். உங்களுக்கு இதய பலவீனம் கிடையாது என்றால் இப்படத்தைக் காண...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in