

ஜான் க்ரெளலி இயக்கத்தில், நிக் பெய்ன் எழுத்தில் கடந்த ஆண்டு வெளியான காதல் திரைப்படம் 'வீ லிவ் இன் டைம்' (We live in time). ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் , ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
காதல் ஜோடியின் வாழ்க்கையை பல்வேறு பரிணாமங்களில் அழகாக காட்டும் திரைப்படம் இது. வீட்டாபிக்ஸ் பிரதிநிதியான டோபியாஸ் டுராண்ட் (ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ), தனது மனைவி வழங்கிய விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக, பேனா வாங்குவதற்காக, சாலையில் அலைந்து திரிகிறார். அப்போது முன்னாள் காதலி ஸ்கேட்டர் மற்றும் பவேரிய - ஃபியூஷன் சமையல்காரரான அல்முட் ப்ரூல் (ஃப்ளோரன்ஸ் பக்) ஓட்டி சென்ற கார் அவரை மோதுகிறது.
எதிர்பாராத விதமாக சந்தித்த இருவரும், ஒருவரையொருவர் தங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க முடிவு செய்கின்றனர். அல்முட் ஒரு சிறந்த சமையல் கலைஞர். அல்முட் எடுக்கும் எந்த முடிவையும் மதிக்கும் சிறந்த கணவராக இருக்கிறார் டோபியாஸ். அல்முடிற்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. கருப்பை நீக்க சிகிச்சை மூலமாக அவர் குணமடைகிறார். அதன்பின், பல முயற்சிகளுக்குப் பிறகு அல்முட் கர்பமடைந்து, பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அல்முட் மீண்டும் கருப்பையில் வேதனையை உணருகிறார். அவரது புற்றுநோய் மூன்றாம் நிலையை அடைந்திருப்பதை அவரும் அறிந்திருக்கிறார். புற்றுநோயில் இருந்து குணமடைய சிகிச்சை பெற அறிவுற்றுத்துகிறார் டோபியாஸ். ஆனால், தனது தோழி சைமனுடன் சேர்ந்து மாபெரும் சமையல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற நினைக்கிறார் அல்முட். இதில் அல்முட் எதை தேர்ந்தெடுத்தார் என்பதை நான் - லீனியர் வகை திரைக்கதையாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஜான் க்ரெளலி. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.