

நேரத்தை வைத்து விளையாடுவதில் ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர்கள்தான் கில்லாடிகள் என நினைத்தால் அது தவறு. தென் கொரிய வெகுஜன சினிமாக்காரர்கள் நாங்களும் அதில் கெத்து எனக் காட்டிவிட்டார்கள். அதை நிரூபிக்கும் ஒரு படம் ‘டைம் ரெனகெட்ஸ்’ Time Renegades (2016). கதாநாயகியை 1983 பிறகு 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கொன்று விடுவார்கள். இரண்டு கதாநாயகர்கள். இருவருமே அந்த இருவேறு காலக்கட்டத்தில் கொல்லப்பட்ட கதாநாயகியைக் காதலித்திருப்பார்கள்.
நிகழ்வுகள் கதாநாயகர்கள் இருவருக் கும் கால மாறுதலுடன் கனவில் வந்துபோகும். காதலியைக் கொன்றது யார் என்பதை அவர்கள் கால வளையத்தைத் தாண்டி எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அட்டகாசமான திருப்பங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள். அறிவியல் புனைவுக்குள் காதலும் இணையும்போது அது தனி ரசவாத மாகிவிடுகிறது. தற்போது அமேசன் தளத்தில் காணலாம்.