கவனம் ஈர்க்கும் அனுமோலின் ‘ஹார்ட் பீட்’ வெப்சீரிஸ்

கவனம் ஈர்க்கும் அனுமோலின் ‘ஹார்ட் பீட்’ வெப்சீரிஸ்
Updated on
1 min read

மலையாள நடிகை அனுமோல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஹார்ட் பீட்’ இணைய தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது வரை 30 நிமிடங்கள் ஓடும் 4 எபிசோடுகள் வெளியாகியிருக்கினறன.

ஆர்கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றும் ரதி (அனுமோல்) எப்போதும் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் கறாரான மருத்துவர். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காததால், அவரது குழந்தைகள் தாய்பாசமின்றி வளர்கினறனர். இதற்கிடையில் ரதி பணியாற்றும் மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் சிலர் இன்டர்ன்ஷிப்புக்காக வர, அடுத்தடுத்து சில எமோஷனல் காட்சிகள் மற்றும் ஜாலியான திரைக்கதையை சுற்றி நகர்கிறது தொடர்.

மருத்துவர்களுக்கான நேரம் தவறாமையும், அவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் சொல்லும் இத்தொடர், இன்றைய சூழலில் பெற்றோர்களின் அரவணைப்பின்றி குழந்தைகள் வளர்வதை அவர்களின் ஏக்கங்கள் மூலம் எடுத்துரைக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், அயற்சியின்றி கடக்கிறது தொடர். முழுமை பெறாத காட்சிகள் அழுத்தமான உணர்வை ஏற்படுத்த தவறிவிடுகின்றன.

4வது எபிசோடில் ஒரு தாயாக தன் தவறை உணரும் அனுமோல் காட்சிகள் கலக்கம். தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், உள்ளிட்ட பலரும் தேவையான பங்களிப்பை செலுத்துகினறனர். மொத்த தொடரின் நாயகியாக அனுமோல் ஈர்க்கிறார். அடுத்தடுத்த எபிசோடுகளைப் பொறுத்து மொத்த தொடரையும் கணிக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in