

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் வெப் தொடர் படப்பிடிப்பு காமெடி ஜானரில் உருவாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
ஜீ 5 ஓடிடி தளத்துக்காக உருவாகும் இத்தொடரை ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. அமீன் பாரிஃப் இயக்கும் இதில் அன்பு செல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கவுதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், மலையாள மொழிகளில் உருவாகும் இத்தொடர், நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இன்றைய ஓடிடி ரசிகர்களைக் கவரும் நவீன கதை சொல்லல் முறை எனத் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்கிறது படக்குழு.