‘பத்தா’ முதல் ‘இம்மார்டல்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

‘பத்தா’ முதல் ‘இம்மார்டல்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
Updated on: 
3 min read

பண்டிகை கால கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிற நிலையில் வார இறுதியைக் கொண்டாடும் விதமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள், இணையத் தொடர்களின் பட்டியல் இது.

பத்தா: பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி  கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிய படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், மாஸ்டர் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், பேபி சரண்யா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம், அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 80-களின் கால பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த ஆக்‌ஷன் காமெடி டிராமா அக்டோபர் 29 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தி டார்க் ஹெவன்: பாலாஜி இயக்கத்தில் உருவான படம் ‘தி டார்க் ஹெவன்’. சித்து சித், தார்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அக்டோபர் 30 அன்று பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது.

சிக்மா: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக இயக்கி வெளியான படம், ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன்,  ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர் சனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் அக்டோபர் 2 –ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இம்மார்டல்: மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியானப் படம் ‘இம்மார்டல்’. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் கயாடு லோஹர், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செப்டம்பர் 4-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஃபேண்டஸி த்ரில்லர் தமிழ் படம், அக்டோபர் 30 அன்று சோனி லிவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

லவ் ஆல்வேஸ்: மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இணையத் தொடர் ‘லவ் ஆல்வேஸ்’. இதில் கவுரி கிஷன், ரம்ஜான் முஹம்மது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா, மாயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தென்கொரிய வெப்டூனை அடிப்பாடையாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த காதல் ஃபேண்டஸி இணையத் தொடர் அக்டோபர் 30 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அவரச்சன் & சன்ஸ்: அமல் ஷீலா தம்பி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அவரச்சன் & சன்ஸ்’.  இந்தப் படத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் ஃபோரட், ஜானி அந்தோணி, கிரேஸ் அந்தோணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த மலையாளப் படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியானது. இந்த நகைச்சுவை படம் தற்போது அக்டோபர் 30 அன்று ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்: ஷஷாங்க் யெலெட்டி இயக்​கத்தில் வெளியான படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், பேபி சாரா பலேகர், சவுரப் சச்தேவ், மகேஷ் மஞ்ரேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த நகைச்சுவை ஃபேண்டஸி திரைப்படம் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தெள்ள காகிதம்: ரமேஷ் பன்ட்ரெட்டி இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் ‘தெள்ள காகிதம்’. இந்தப் படத்தில் ஹர்ஷ் ரோஷன், போகபதி நக்‌ஷத்திரா சரண்யா, ராஜ் குமார்  காசிரெட்டி, தீபக் மாலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அப்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான  இந்த தெலுங்கு படம் அக்டோபர் 29 அன்று  ஈ டிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ருத்ரவனம் பிஎஸ்: சசிதர் முன்னங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு இணையத் தொடர் ‘ருத்ரவனம் பிஎஸ்’. இதில், நரேஷ் அகஸ்டா, பானர்ஜி,  ஷிவா அளபதி, சுகலி சிலோனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த க்ரைம் மர்ம இணையத் தொடர், அக்டோபர் 30 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக  உள்ளது.

எஸ்ஐ யுகாந்தர்: ராகவேந்திர கட்டாரி இயக்கத்தில் வெளியான படம் ‘எஸ்ஐ யுகாந்தர்’. இந்தப் படத்தில் ஆதி சாய்குமார், மேஹாலேஹா, பவன் தேவ் கொனிதேலா, சிவ கிருஷ்ணா, காதம்பரி கிரண், காயத்ரி பார்கவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் க்ரைம் படம் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

‘பத்தா’ முதல் ‘இம்மார்டல்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
Raghu Thatha: அறிவுஜீவி முகமூடிகளை அம்பலமாக்கும் க.பா - திரை தேவதைகள் 41

X