‘ஆக்டோபஸ்’ முதல் ‘ஏகே 47’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

‘ஆக்டோபஸ்’ முதல் ‘ஏகே 47’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
Updated on: 
2 min read

வார இறுதி கொண்டாட்டதைத் திக்குமுக்காட வைக்க பத்துக்கும் அதிகமான படங்கள் வெளியாக இருக்கு நிலையில், வீட்டுத் திரைகளான ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் வெப் தொடர்கள், படங்களின் பட்டியல் இது.

ஆக்டோபஸ்: ஜெயசந்திரன் ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘ஆக்டோபஸ்’. இதில், அஸ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

உறவினர்கள் போல அன்புடன் பழகும் குடியிருப்பு ஒன்றில், ஓர் இளம் பெண் காணாமல் போகிறார். அவர் காணாமல் போனதில் உள்ள மர்மத்தை அக்கம்பக்கத்தினர் தேடத் தொடங்குகின்றனர். 7 எபிசோடுகளாக உருவாகி இருக்கும் இந்த அசல் வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 27 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 (ஏகே47): திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47’. இந்தப் படத்தில் வெங்கடேஷ் டகுபதி ஸ்ரீநிதி ஷெட்டி, நாரா ரோஹித், நிவேதிதா பெத்துராஜ், யுவினா பார்த்தவி, ராஜா ப்ரஜ்வால், ராவ் ரமேஷ், சத்யாம் பிரம்மாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அமைதியான, அழகான வாழ்க்கை நடத்தி வரும் குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் ஏற்படும் திருப்பங்களை பற்றிப் பேசும் இப்படம் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த அதிரடி நகைச் சுவைப்படம் நவம்பர் 27 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வெளியாக உள்ளது.

கர்விடி லக்‌ஷ்மி: கவுரி நாயுடு ஜம்மு இயக்கத்தில் உருவான தெலுங்கு படம் ‘கர்விடி லக்‌ஷ்மி’. இந்தப் படத்தில், கயல் ஆனந்தி, ராக் மயூர், நரேஷ் ராசி, எல்பி ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆந்திராவின் புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர் ரெட்டி விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த இசையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படம் நவம்பர் 27 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கார்ப்பரேட் லவ் ஸ்டோரி: பன்னகா பரணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னட வெப் தொடர் ‘கார்ப்பரேட் லவ் ஸ்டோரி’. இதில், பிரியங்கா உபேந்திரா, சஞ்சனா தாஸ், ப்ரணவ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு டேட்டிங் செயலியில் வேலை செய்யும் நித்யா அர்ஜுன் இருவரும் காதலர்கள். இவர்களின் தொழில் லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடையிலான உறவுச் சிக்கலை இத்தொடர் பேசுகிறது. இந்த அசல் இணையத் தொடர் ஜீ5  ஓடிடி தளத்தில் நவம்வர் 27 அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

லா அண்ட் ஆர்டர்: ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘லா அண்ட் ஆர்டர்’. இந்த படத்தில், பிரகாஷ் வர்மா, லிம்சன் சன்னி, ஜாய் மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா, அபிராமி, ஷங்கர் ராமகிருஷ்ணன், வி.கே.பிரகாஷ், சிறப்பு தோற்றத்தில் மம்மூட்டி நடித்துள்ளனர். போதைப்பொருள் உலகத்தால் தனது மகனை இழந்த இணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர்,  இளம் அதிகாரிகளுடன் இணைந்து போதைப் பொருள் கும்பலுக்கு எதிராக போராடுகிறார். செப்டம்பர் 18 அன்று வெளியான இந்தப் படம், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

சத்யமேவ: தீபு கருணாகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாள வெப் தொடர் ‘சத்யமேவ’. இதில் ரோனி டேவிட் ராஜ், மீனாக்‌ஷி உன்னிகிருஷ்ணன், ஜெயராஜன் கோழிகோடும் தீபு கருணாகரன், அஜித் தன்வந்த்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றிகரமான வழக்கறிஞரான ராஜாராம் கடந்த கால தோல்வியால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடும் பணி அவரிடம் வர, அதன்மூலம் தன்னை அவர் மீட்டெடுப்பதே கதை. இந்த அசல் இணையத் தொடர் ஜீ5 ஓடிடியில் நவம்பர் 27 அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

‘ஆக்டோபஸ்’ முதல் ‘ஏகே 47’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
The Swimmers: தேசமிழந்த யூஸ்ரா, சாரா கற்பிக்கும் மீட்சிப் பாடம் | திரை தேவதைகள் 45

X