

இந்த வாரத்தில் ‘அன்பே டயானா’ முதல் ‘ஐ நோபடி’ வரை பல படங்கள் ஓடிடியில் வெளியாகி திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உள்ளன. பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.
பபிதா சிங் ரிபோர்ட்டிங்:
போலீஸ் கதை பிரியர்களுக்கானது இந்த ‘பபிதா சிங் ரிபோர்ட்டிங்’. அம்பிகா பண்டிட் இயக்கி உள்ள இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், அன்ஷுமான் புஷ்கர், பருன் சோப்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இந்திப் படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது.
சும்பக்:
குடும்ப கலாட்டா நகைச்சுவைப் படமான இதை அதிஷ் கபாடியா எழுதி இயக்கி உள்ளார். சுமீத் வியாஸ், நீனா குப்தா, தேவன் போஜானி அமிரா தஸ்துர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
மைக்கேல்:
பாப் இசையின் மன்னன் மறைந்த மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது, அவரைப் பற்றிய இந்த பயோ பிக். ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 29-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.
பந்தர்:
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் பாபி தியோல், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த இந்தி மொழிப் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
அன்பே டயானா:
பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘அன்பே டயானா’. காதல் நகைச்சுவைப் படமான இதில் ரம்யா ரங்கநாதன், சேத்தன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஐ நோபடி:
நிஸ்ஸாம் பஷீர் இயக்கதில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி திருவோத்து, விஜயராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாள மொழி படம், ஆகஸ்ட் 25-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டார்க் மேட்டர் சீசன் 2:
ஜோயல் எட்ஜர்டன், ஜெனிஃபர் கான்னெல்லி நடித்திருக்கும் இந்த ஆங்கில அறிவியல் புனைகதையின் இரண்டாவது சீசனின் முதல் எபிசோட் ஆகஸ்ட் 27-ம் தேதி ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு எபிசோட் வீதம் அக்டோபர் 30-ம் தேதி வரை அடுத்த 10 எபிசோடுகளும் வெளியாக இருக்கிறது.