நானியின் ‘தி பாரடைஸ்’ அக். 22 ஓடிடியில் வெளியீடு

நானியின் ‘தி பாரடைஸ்’ அக். 22 ஓடிடியில் வெளியீடு
Updated on: 
1 min read

ஹைதராபாத்: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த செப்.  24 அன்று திரையரங்குகளில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

இப்படத்தில் நானியுடன் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியான போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 22ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நானியின் ‘தி பாரடைஸ்’ அக். 22 ஓடிடியில் வெளியீடு
துல்கரின் ‘ஏ ஒ டி’-யில் தன் கனவுக்காகப் போராடும் இளம் பெண்ணின் கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in