மே 1 ஓடிடியில் வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி 2’

மே 1 ஓடிடியில் வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி 2’
Updated on
1 min read

மும்பை: சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி 2', ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மே 1ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகமும் ஜீ5 தளத்தில்தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதிதி பாட்டியா, உல்கா குப்தா, அல்கா அமின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்​துப் பெண்​களை மதம் மாற்​று​வது தொடர்​பான வசனங்​களும், கட்​டாயப்​படுத்தி மாட்டிறைச்சி சாப்​பிட வைப்​பது போன்ற காட்​சிகள் சர்ச்சையை ஏற்​படுத்​தின.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு கேரள உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு 15 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கேரளாவின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், சென்சார் போர்டு  முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் படத்துக்கு சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து படத்தயாரிப்பாளர் விபுல் ஷா உடனடியாக மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1 ஓடிடியில் வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி 2’
அஜித் பிறந்த நாளன்று ‘பில்லா’ ரீரிலீஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in