நெட்​பிளிக்​ஸில் ‘சூப்​பர் சுப்​பு’ - என்ன ஸ்பெஷல்?

நெட்​பிளிக்​ஸில் ‘சூப்​பர் சுப்​பு’ - என்ன ஸ்பெஷல்?
Updated on
1 min read

சந்​தீப் கிஷன், மிதிலா பால்​கர், முரளி சர்மா உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘சூப்​பர் சுப்​பு’. மாலிக் ராம் இயக்கியுள்ளார். சிலகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இந்​தத் தொடரில் கெட் அப் சீனு, மானசா சவுத்​ரி, ஜீவன், பிரம்​மானந்​தம் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். இத்​தொடர் ஜூலை 2-ல் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளியாகிறது.

இந்த வெப் தொடர் பற்றி இயக்​குநர் மாலிக் ராம் கூறும்​போது, “’சூப்பர் சுப்​பு’ மூலம் நகைச்​சுவை​யாக​வும், உணர்​வுப்​பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்​பினோம். அதே நேரம் பாலியல் கல்வி குறித்த உரை​யாடல்​களை மறைத்​துப் பேசாமல், இயல்​பாகப் பார்க்க வேண்​டும் என்​ப​தை​யும் நோக்​க​மாகக் கொண்​டோம். அதற்​கான சிறந்த வழி நகைச்​சுவை தான்.

சிரிப்பு உடனடி​யாகத் தயக்​கத்தை உடைத்​து​விடு​கிறது. இந்​தக் குழப்​பங்​களின் மையத்​தில், உலகில் தனது இடத்​தைத் தேடும் அப்பா​வி​யான சுப்பு இருக்​கிறார். இந்​தத் தொடர் குடும்ப உறவு​கள், தலை​முறை இடைவெளி​கள் மற்​றும் மனித உறவு​களைப் பற்றியும் பேசுகிறது” என்​றார்.

நெட்​பிளிக்​ஸில் ‘சூப்​பர் சுப்​பு’ - என்ன ஸ்பெஷல்?
ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை - நீட் மறுதேர்வை முன்னிட்டு அதிரடியும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in