ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5: வால்யூம் 2 ட்ரெய்லர் எப்படி? - எதிர்பாரா ட்விஸ்ட்டுக்கு அச்சாரம்!

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5: வால்யூம் 2 ட்ரெய்லர் எப்படி? - எதிர்பாரா ட்விஸ்ட்டுக்கு அச்சாரம்!
Updated on
1 min read

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' ஐந்தாவது மற்றும் இறுதி சீசனின் இரண்டாம் தொகுதிக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த தொடர் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் 4 சீசன்கள் பெற்ற வரவேற்பை அடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது இத்தொடர். பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஐந்தாவது சீசனின் முதல் தொகுதி அண்மையில் வெளியானது. தற்போது இதன் அடுத்த தொகுதிக்கான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ஹாக்கின்ஸ் நகரத்தின் இறுதிக்கட்டப் போரை இந்த ட்ரெய்லர் உறுதி செய்கிறது. அப்ஸைட் டவுன் வில்லனான வெக்னாவுக்கு எதிராக லெவன் மற்றும் அவரது நண்பர்கள் தயாராவதாக காட்டப்படுகிறது.

ட்ரெய்லரின் முக்கிய அம்சமாக, லெவன் தனது தோழி காளியுடன் இணையும் தருணம் அமைந்துள்ளது. முந்தைய தொகுதியின் க்ளைமாக்ஸில் வில் பையர்ஸுக்கு கிடைத்த சூப்பர்பவர் பெரும் ஹைப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு நியாயம் செய்யும் காட்சிகள் வரவிருக்கும் எபிசோட்களில் இருக்கும் என்று நம்பலாம். அத்துடன் இதில் வெக்னாவின் கடந்தகாலமான ஹென்றி கிரீல் பற்றிய ஆழமான பின்னணி இடம்பெறும் எனத் தெரிகிறது.

இரண்டாம் தொகுதியில் மொத்தம் மூன்று எபிசோட்கள் மட்டுமே உள்ளன. இதில் கடைசி எபிசோடான 'தி பிரிட்ஜ்' ஒரு திரைப்படம் அளவுக்கு சுமார் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் இடம்பெறும் வசனங்கள் இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றப் போகும் ஒரு பெரிய ட்விஸ்ட்டுக்கு அச்சாரமாக தெரிகின்றன. இந்த இறுதிப் பகுதி இந்தியாவில் வரும் டிசம்பர் 26 அன்று காலை 6:30 மணிக்கு நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in