

ஜனவரி 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ‘சிறை’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிறை’. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கதையினை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார்.
தமிழகத்தில் மட்டும் மொத்த வசூலில் ரூ.25 கோடியை கடந்தது. இப்படம் வெளியாகும் முன்பே இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. தற்போது இப்படம் ஜனவரி 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
பொங்கல் வெளியீட்டு படங்களையும் தாண்டி தற்போதும் சில திரையரங்குகளில் ‘சிறை’ திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.